2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிப்பு நிறுத்தம் 200 நோட்டு மீது கவனம்!

RBI stops printing Rs 2000 notes, focus turns to new Rs 200 notes

ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்தி விட்டு 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த நவம்பர் 8ந் தேதி 6.3 பில்லியன் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மோடி அரசால் மதிப்பிழக்க செய்யப்ட்டது. அந்த சமயத்தில் இருந்து தற்போது வரை, 3.7 பில்லியன் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 7.7 ட்ரில்லியன் ஆகும். அதேபோல் 14 பில்லியன் புதிய 500 ரூபாய் நோட்டுகள் நாட்டில் புகழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 7.8 ட்ரில்லியன் ரூபாய்

தற்போது சில்லறைத் தட்டுப்பாட்டினை குறைக்கும் வகையில் புதிய 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவதில் ரிசர்வ் வங்கி தீவிரம் காட்டுகிறது. இதனால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்தி விட்டு 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதில் வேகம் காட்டுகிறது.

 

You'r reading 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிப்பு நிறுத்தம் 200 நோட்டு மீது கவனம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சக ஊழியர்களுக்கு அதிர்ச்சியளித்த குடியரசுத் தலைவர் மகள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்