அரசாங்கத்தின் ‌மானியத் திட்டங்களைப் பதிவு செய்யலாம்...சந்தை நிலவரத்தை ‌பெறலாம் - விவசாயிகளுக்கு உதவும் இந்த ஆப் பற்றி தெரிந்து கொள்வோம்..!

Lets find out about the app that helps farmers ..!

விவசாயிகளுக்கு பயன்படும் உழவன் ஆஃப்

தமிழக அரசு விவசாயிகளுக்கு பயன்படும் வகையிலும் , விவசாயம் சார்ந்த திட்டங்கள் மற்றும் மானிய விவரம் போன்றவற்றையும் இந்த ஆஃப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.இந்த ஆஃப்பை Play store ல் இருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் இந்த ஆஃப் install செய்து பின்னர் உங்களின் மொபைல் எண் , ஆதார் எண் போன்றவற்றை உள்ளீடு செய்து பயனர் பதிவை நிறைவு செய்ய வேண்டும்.

இந்த ஆஃப்பை நீங்கள் இரண்டு மொழிகளில் ( ஆங்கிலம் , தமிழ் ) பயன்படுத்தி கொள்ளலாம்.

அந்த ஆஃப் ல்
1.மானியத் திட்டங்கள்
2.இடுபொருள் முன்பதிவு
3.பயிர் காப்பீடு விவரம்
4.உரங்கள் இருப்பு நிலை
5.விதை இருப்பு நிலை
6.வேளாண் இயந்திரம் வாடகை மையம்
7.சந்தை விலை நிலவரம்
8.வானிலை அறிவுரைகள்
9.பண்ணை வழிகாட்டி
10.இயற்கை பண்ணை பொருட்கள்
11.FPO ( Farmer Production Organization ) பொருட்கள்
12.அணை நீர் மட்டும்
13.வேளாண் செய்திகள்
14.பூச்சி/ நோய் கண்காணிப்பு/பரிந்துரை
15.அட்மா பயிற்சி மற்றும் செயல்விளக்கம்
16.உழவன் இ- சந்தை

போன்ற அனைத்து தகவல்களையும் இந்த ஆஃப் ல் இருந்து பெறலாம்.

மேலும் மானிய திட்டங்களை இந்த ஆஃப் - ன் மூலமும் பதிவு செய்யலாம் மற்றும் அதற்கான முன்பதிவையும் இந்த ஆஃப் ல் இருந்து பதிவு செய்து கொள்ளலாம்.

இயந்திரமயமாக்கும் திட்டத்தையும் இந்த ஆஃப் - ன் மூலமும் பதிவு செய்து பெறலாம்.

You'r reading அரசாங்கத்தின் ‌மானியத் திட்டங்களைப் பதிவு செய்யலாம்...சந்தை நிலவரத்தை ‌பெறலாம் - விவசாயிகளுக்கு உதவும் இந்த ஆப் பற்றி தெரிந்து கொள்வோம்..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குக்கின் கல்லறை தகர்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்