தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குறைந்த வட்டியில் எப்படி கடன் வாங்கலாம்?

How to get a low interest for those who think they need to start a business

கொரோனாவின் தாக்கத்தால் அனைவரும் நிதி நெருக்கடியின் பிடியில் சிக்கித் தவிக்கிறோம். சரியான சேமிப்பு , தொழில் போன்ற சாரம்சங்களைச் சரியாகக் கையாளாத பலர் இந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். இந்த நிலையில் அனைவரும் விவசாயம் மற்றும் சுய தொழிலை நோக்கித் திரும்பியுள்ளனர்.சுய தொழில் செய்ய நிறைய யோசனைகள் இருந்தாலும் அதனைச் செயல்படுத்த போதிய நிதி ஆதாரங்கள் இல்லாமல் பலர் வேறு வழியின்றி கட்டாயத்தின் பேரில் அலுவலகம் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அரசு பல மானிய திட்டங்களை அறிவித்தாலும் பாமரனின் கை எப்போதும் அரசுக்கு எட்டா தூரத்தில் தான் உள்ளது. இவைகளை களையவும் நிதி மூலங்களை அல்லது ஆதாரங்களைத் திரட்டவும் நமக்கு இரண்டு வகையான வழிகள் உள்ளது .

1. நகை கடன்
2. தனிநபர் கடன்

மேற்கூறிய இரண்டும் இலகுவான வழிமுறைகளைக் கொண்டது .

இதில் நகை கடன் என்பது மிகவும் சுலபமான வழிகளில் ஒன்று. மேலும் அனைத்துவிதமான வங்கிகளிலும் எந்நேரம் வேண்டுமானாலும் நாம் நகைக் கடனை பெறலாம். சில வங்கிகளில் தரப்படும் வட்டி விகிதம் மற்றும் நகைக்கான தொகையைக் காணலாம்.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்க நகைக்கு 3518, அதற்கான ஆண்டு வட்டி 7.5 % கணக்கிடப்படுகிறது.
கனரா வங்கியில் ஒரு கிராம் தங்க நகைக்கு 3200 ரூபாயும் ஆண்டு வட்டி 7.5 % கணக்கிடப்படுகிறது. கரூர் வைசியா வங்கியில் கிராமிற்கு 3250 ரூபாயும் ஆண்டு வட்டி 8% மேல் வசூலிக்கப்படுகிறது.

சிட்டி யூனியன் வங்கியில் கிராமிற்கு 3300 ரூபாயும் ஆண்டு வட்டி 8.2 % கணக்கிடப்படுகிறது.

எனவே நகைக்கடன் வாங்க விரும்புவோர் பொதுத்துறை வங்கிகளை நாடுவது சிறந்ததாக இருக்கும்.

தனிநபர் கடன்

தனிநபர் கடனை பொறுத்தவரை வங்கியின் சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் .
1. புகைப்படம்
2.ஆதார் அட்டை நகல்
3.சம்பள வரைவு பட்டியல் ( pay certificate )
4. கடைசி நான்கு மாத சம்பள வரைவு ( Last 4 months statement )
5. பான் அட்டை நகல் ( Photocopy of pan card )
5. சிபில் மதிப்பெண் (Cibil score )

மேற்கூறிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் தனிநபர் கடனுக்கான ஆண்டு வட்டி 14% ,HDFC வங்கியில் ஆண்டு வட்டி 14.5% ,ஐசிஐசிஐ (ICICI) வங்கியில் தனிநபர் கடனுக்கான ஆண்டு வட்டி 15.9% , ஆக்சிஸ் வங்கியில் தனிநபர் கடனுக்கான ஆண்டு வட்டி 16 % என வசூலிக்கப்படுகிறது.

எனவே பொதுத்துறை வங்கிகளை நாடுவது சிறந்ததாக இருக்கும்.

You'r reading தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குறைந்த வட்டியில் எப்படி கடன் வாங்கலாம்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியில் கலக்கிய காமிக்ஸ்டான், தமிழில், செம காமெடி பா பெயரில் வருகிறது.. 3 காமெடியன்களுடன் களம் இறங்கும் காமெடி நடிகை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்