தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை! வாங்கி குவிக்க தயாராகும் குடும்ப தலைவிகள்! 23-11-2020

கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரியத் தொடங்கியது. வல்லரசு நாடுகளின் பொருளாதார சிக்கலைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியால் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.

மேலும் பொருளாதார மந்த நிலை உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதன் தொடர்ச்சியாகத் தங்கத்தின் விலை சரிந்து கொண்டே வருகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4769 க்கு விற்பனையானது. வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.8 குறைந்து, கிராமானது ரூ‌ 4752 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் - 4752
8 கிராம் ( 1 சவரன் ) - 38016

தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5140 க்கு விற்பனையானது. தூய தங்கத்தின் விலையானது இன்று கிராமிற்கு ரூ.8 குறைந்து, கிராமானது 5132 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5132
8 கிராம் - 41056

வெள்ளியின் விலை

தங்கத்தின் விலை உயரும்போது, வெள்ளியின் விலை குறையத் தொடங்கும். ஆனால் இன்று வெள்ளியானது எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் கிராமானது 66.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 66700 க்கு விற்பனையாகிறது.

You'r reading தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை! வாங்கி குவிக்க தயாராகும் குடும்ப தலைவிகள்! 23-11-2020 Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆண்டவர் வருகை... அன்பு அன்னை அர்ச்சனா, உணர்ச்சிவசப்பட்ட சோம் - பிக் பாஸின் 50வது நாள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்