சவரனுக்கு ரூ. 472 உயர்ந்தது! ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை! 16-12-2020

கடந்த அக்டோபர் மாதம் முதலே இறங்கத்தொடங்கிய தங்கத்தின் விலை, நவம்பர் மாதத்தில் அதலபாதளத்திற்கு சென்றது. கொரோனா நோய்த்தொற்றின் தொடக்கத்தில் வரலாறு காணாத உயரத்திற்கு சென்ற தங்கத்தின் விலையானது, பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்ல திரும்ப தொடங்கியபோது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. வல்லரசு நாடுகளின் பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்காக உலக நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதும், பொருளாதார மந்த நிலையும் தான் வீழ்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த விலை வீழ்ச்சியால் வெகுஜன மக்கள் ஆர்ப்பரிப்பில் உள்ளனர்‌.ஆனால் முதலீட்டாளர்கள் இடையே இந்த விலை வீழ்ச்சி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதிவரை குறைந்து கொண்டே இருந்த தங்கத்தின் விலையானது, உயர ஆரம்பித்தது, இன்று ஏற்றத்துடன் சந்தை தொடங்கி உள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4653 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.17 உயர்ந்து, கிராமானது ரூ.4670 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)
1கிராம்- 4670
8 கிராம் (1 சவரன்) - 37360

துய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூ.5038 க்கு விற்பனையானது. இன்று தூய தங்கத்தின் விலை கிராமிற்க்கு ரூ.17 உயர்ந்து, கிராமானது ரூ.5055 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம்(24k)
1 கிராம் - 5055
8 கிராம் - 40440

வெள்ளியின் விலையானது,
தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தாலும், வெள்ளி ஓரளவிற்கு சந்தையில் தாக்குப்பிடிக்கும். இன்று வெள்ளியின் விலையினாது, நேற்றைய விலையில் கிராமிற்கு 1 ரூபாய் உயர்ந்துள்ளது. எனவே இன்று ஒரு கிராமானது ரூ.68.90 க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.68900 க்கு விற்பனையாகிறது.

You'r reading சவரனுக்கு ரூ. 472 உயர்ந்தது! ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை! 16-12-2020 Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரகுலுக்கு ஆடம்பர வீடு பரிசு தந்தது யார்? நேருக்கு நேராக பிரபல நடிகை கேள்வி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்