அமேசானுக்கு மட்டுமா இந்தியனுக்கும் ஆப்பு!- வருகிறது வால்மார்ட்!

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்க வால்மார்ட் தீவிரமாகியுள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரும் சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் தற்போது ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் 55-61% சதவிகித பங்குகளை வால்மார்ட் வாங்க முடிவு செய்துள்ளது.

சர்வதேச அளவில் அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துடன் போட்டியிட்டு ஜெயிப்பதற்காகவே வால்மார்ட் இத்தகைய வணிக திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை என்றாலும் தற்போது கூகுளின் தலைமை நிறுவனமான ‘ஆல்ஃப்பெட்’ நிறுவனமும் ஃப்ளிப்கார்ட்டின் 10 சதவிகித பங்குகளை வாங்க முன்வந்துள்ளது.

இதனால், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 70 சதவிகித பங்குகள் அயல்நாட்டு நிறுவனங்களிடம் கைமாற உள்ளது. ஏற்கெனவே ஆன்லைன் வர்த்தகத்தால் இந்தியாவின் பெரும்பான்மை வணிகமான சிறுதொழில், குறுந்தொழில்கள் முடங்கி உள்ள நிலையில் சர்வதேச நிறுவனமான வால்மார்ட் இந்தியாவில் கால் பதிக்கும் போது இந்தியாவின் பொருளாதார நிலையில் தாக்கம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அமேசானுக்கு மட்டுமா இந்தியனுக்கும் ஆப்பு!- வருகிறது வால்மார்ட்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ’பேட்டா எங்கம்மா தராங்க..’- கோலிக்கு பொங்கலும் புளியோதரையும்தான்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்