மெக்டொனால்டின் மாற்றம்-வாடிக்கையாளர்கள் வரவேற்புபணியாளர்கள்..?

மெக்டொனால்டு, இதுவரை குவார்ட்டர் பௌண்டர் வகை பர்கர்களுக்கு குளிரில் பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சியை பயன்படுத்தி வந்தது. தற்போது நூறு சதவீதம் புதிய இறைச்சியை (ஃப்ரஷ் பீஃப்) பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
தங்களது பர்கர் வகை தயாரிப்புகளில் சிலவற்றில் இந்த மாற்றத்தை மெக்டொனால்டு கொண்டு வந்துள்ளது. புதிய இறைச்சியை பயன்படுத்துவதால் "குவார்ட்டர் பௌண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது" என்றும், "வாடிக்கையாளர்கள் சூடான, சுவையான பர்கர்களை விரும்பினர். அதை தருவதே எங்கள் கடமை," என்றும் மெக்டொனால்டு தொடர்பு மேலாளர் பில் சாகேன் கூறியுள்ளார்.
புதிய மாட்டிறைச்சி (ஃப்ரஷ் பீஃப்) கேட்டு ஆர்டர் கொடுக்கப்படும்போது, ஒரு மணியொலி கேட்கும் ஏற்பாட்டினை மெக்டொனால்டு செய்துள்ளது. தொடர்ந்து கேட்கும் இந்த மணியோசை தங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதாக மெக்டொனால்டு பணியாளர்கள் கருதுகின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மெக்டொனால்டின் மாற்றம்-வாடிக்கையாளர்கள் வரவேற்புபணியாளர்கள்..? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பீலே எரிமலைகளின் தெய்வமே எங்கள்மேல் இரக்கமாயிரு-ஹவாய் மக்கள் கதறல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்