உணவுகள் நம் வாய் வழியாகவே வயிற்றினுள் செல்கின்றன. வாயை சுத்தமாக வைத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியத்தின் பெரும்பங்கு நிறைவேறிவிடும். தினமும் காலையில் 15 நிமிடம் செலவழித்தால் வாயை மிகவும் தூய்மையாக பராமரிக்கலாம். வாயினுள் இருக்கும் தீமை செய்யும் கிருமிகளை ஒட்டுமொத்தமாக வெளியேற்றும் வழிதான் ஆயில் புல்லிங்.
தடுப்பூசி போடப்பட்ட பிறகு மோசமான தீவிர பக்கவிளைவு ஏற்பட்டால் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் இழப்பீடு வழங்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் 55 லட்சம் தடுப்பூசிகளை வாங்குவதற்கான ஆணையை அரசு வழங்கியுள்ளது.
உலகமெங்கும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமானதாக உள்ளது.நிறுவனத்தின் தனியுரிமை கொள்கைகளை மாற்றியுள்ளதாகவும் அவற்றை ஒப்புக்கொள்ளாதவர்களின் கணக்குகள் அழிக்கப்படும் என்றும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அறிவிக்கை அனுப்பியது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 வரிசையில் கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்21+, கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆரம்பித்துள்ளது. இப்போது வாங்கினால் ஜனவரி 25ம் தேதி முதல் டெலிவரி கிடைக்கும்.
பல பெண்களுக்கு மாதவிடாய் சரியான சுழற்சியில் வரும். சில நேரங்களில் சில காரணங்களால் அது தாமதிக்கக்கூடும். மனஅழுத்தம் அதிகமாதல், ஒழுங்கற்ற சாப்பாட்டு முறைகள், உடல் செயல்பாடு குறைவான வாழ்க்கை முறை, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை பீரியட்ஸ் என்னும் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கக்கூடியவையாகும்.
வாட்ஸ்அப் செயலியின் தனி காப்புரிமை கொள்கை மாற்றப்பட்டதால் பல பயனர்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் ஆகிய செய்தி செயலிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். நீங்கள் சிக்னல் (Signal) செயலியை பயன்படுத்த இருந்தால் இவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழரின் பண்பாட்டு நிகழ்வான மாடு பிடிக்கும் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் தொடங்கியுள்ளது. கோவிட்-19 காரணமாக சில விதிமுறைகளோடு தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்குபெறுகின்றன.
தமிழகத்தில் மட்டும் தோராயமாக 450 பொறியில் கல்லூரிகள் உள்ளன. இந்த பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டொன்றுக்கு சராசரியாக 1.5 இலட்சம் மாணவர்களுக்கு மேலு பொறியியல் படிப்பில் சேர்கின்றனர்.
கோவிட்-19 தொற்றுநோய்க்கான தடுப்பூசி குறித்து காங்கிரஸ் கட்சி மாற்றுக் கருத்தினை தெரிவித்துள்ளது.
பாலியல் வல்லுறவு குற்றஞ்சாட்டும் பெண்ணின் சகோதரிக்கும் தனக்கும் இரண்டு பிள்ளைகள் இருப்பதாக மகாராஷ்டிரா மாநில சமூகநீதி துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.