அமெரிக்கா: அரிசோனாவில் அமைகிறது இன்போசிஸ் தொழில்நுட்ப மையம்

அமெரிக்கா அரிசோனாவில் புதிய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையம் அமைக்க இருப்பதாக இன்போசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 
தற்போது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இண்டியானாவின் இண்டியானாபொலிஸ் மற்றும் வடக்கு கரோலினாவின் ராலே ஆகிய இடங்களில் இன்போசிஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப மையங்கள் அமைந்துள்ளன.
 
அரிசோனாவில் அமையவிருக்கும் புதிய மையம் ஆட்டோனமஸ் டெக்னாலஜி என்னும் தன்னாட்சி தொழில்நுட்பம், ஐஓடி என்னம் இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், ஃபுல்ஸ்டேக் பொறியியல், டேட்டா சயன்ஸ் என்னும் தரவு அறிவியில் மற்றும் சைபர் செக்யூரிட்டி என்னும் இணையவெளி பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும் என்றும் கூறப்படுகிறது.
 
அரிசோனா உள்ளிட்ட அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை புரிவதற்கும், உலக பொருளாதாரம் தீவிரமாக டிஜிட்டல்மயமாகி வரும் நிலையில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் உள்நாட்டு பணியாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இப்புதிய முயற்சி வழிவகுக்கும் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் ரவி குமார் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்காவில் புதிய மையங்கள் அமைத்து அவற்றில் 10,000 அமெரிக்கர்களை பணியில் அமர்த்த இருப்பதாக கடந்த ஆண்டு மே மாதத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை 5,874 அமெரிக்கர்கள் இன்போசிஸில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 2023ம் ஆண்டு அமையவிருக்கும் அரிசோனா இன்போசிஸ் மையத்தில் 1,000 அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. கன்னடிகட்டில் ஹார்ட்ஃபோர்டிலும் ரோட் ஐலண்டில் புரோவிடென்ஸ் நகரிலும் தொழில்நுட்ப மையங்களை அமைக்க இருப்பதாக இன்போசிஸ் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

You'r reading அமெரிக்கா: அரிசோனாவில் அமைகிறது இன்போசிஸ் தொழில்நுட்ப மையம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புரட்டாசி சனி ஏன் கும்பிடுகிறோம்....?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்