போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த 4 இந்திய பெண்கள்!

4 indian origin women tops in forbes tech list

பிரபல போர்ப்ஸ் இதழின் டாப் 50 தொழில்நுட்ப பெண்கள் பட்டியலில் 4 இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.

தொழில்நுட்ப உலகில் சாதனை படைத்து வரும் 50 பெண்கள் பட்டியலை பிரபல வர்த்தக இதழான போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கும் பெண் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். 

சைபர்செக்யூரிட்டி, நிறுவனம் மற்றும் நுகர்வோர் தொழில்நுட்பம், கேமிங், செயற்கை நுண்ணறிவு, ஏரோ-ஸ்பேஸ், பயோடெக் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளில் தலைமை வகிக்கும் திறமையான பெண்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 

சிஸ்கோவின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அலுவலரான பத்மஸ்ரீ வாரியர், ஊபர் நிறுவன மூத்த தலைவர் கோமல் மங்டானி, ஊபர் நிறுவன தொழில்நுட்ப அலுவலர் நேஹா நர்கடெ, டிராபிரெக் நிறுவன தலைமை செயல் அதிகாரி காமாட்சி சிவராமகிருஷ்ணன் ஆகியோர் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். 

ஆண்களுக்கு இணையாக தொழில்நுட்ப துறையில் தங்களாலும் சாதிக்க முடியும் என சாதித்து காட்டி சாதிக்க துடிக்கும் பல பெண்களுக்கு முன் உதாரணமாக இவர்கள் திகழ்கின்றனர்.

You'r reading போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த 4 இந்திய பெண்கள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இனி பவாருக்கு பவர் இல்லை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்