மதுராந்தகம் அருகே அம்பேத்கர் சிலை சேதம் : விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியல்

மதுராந்தகம் அருகே செய்யூரில் அம்பேத்கர் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டன.ர் அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. தொண்டர் தீக்குளிக்க முயற்சி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள செய்யூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சிமெண்டால் ஆன அம்பேத்கரின் இடுப்பு அளவு சிலை வைக்கப்பட்டுள்ளது
இந்த சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இவற்றைக் கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் கூட்டத்தில் இருந்த சிவா என்பவர் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். அவரை தொண்டர்கள் மறித்து தண்ணீர் ஊற்றி அழைத்துச்சென்றனர் .இந்த சம்பவத்தைத் தொடர்ந்து செய்யூரில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. பதற்ற நிலை காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2002 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் இந்த சிலை இதுபோன்று சேதப்படுத்தப்பட்டது. சிமெண்ட் சிலைக்குப் பதிலாக வெங்கல சிலை வைக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அரசு அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர் ஆம் ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.தற்போது மீண்டும் சிலை சேதப்படுத்தப்பட்டது எனவே வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

You'r reading மதுராந்தகம் அருகே அம்பேத்கர் சிலை சேதம் : விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இங்கிலாந்திற்கு மேலும் ஒரு தலைவலி: புதிய மாறுபாட்டுடன் கொரோனா தாக்குவதாக சுகாதாரத்துறைச் செயலர் அறிக்கை.!!!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்