மாஸ்க்கில் ஆடை வடிவமைத்து திருநங்கை சாதனை ஆச்சிரியத்தில் மூழ்கிய மக்கள்..

mask dress trending in social media

சென்னையை சேர்ந்த திருநங்கை வெறும் மாஸ்க்கை வைத்து அசத்தலாக ஆடை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.

கோவையில் இருந்து வேலைக்காக சென்னையை நோக்கி பயணித்தார் திருநங்கை பிரஸ்ஸி. இவர் மெட்ராஸ் மிஸ் இந்தியா மாடலிங்கில் கலந்து கொண்டு முதலாக வெற்றி பெற்றுள்ளார். இவர் சென்னை பகுதியில் உள்ள டாட் ஸ்கூல் ஆஃப் டிசைனிங் பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கொரோனா நோயால் இந்தியா முழுவதும் பெரிதாக பாதிக்கபட்டுள்ளது. இதனால் மாஸ்க் அணிந்து கொண்டு தான் வெளியே போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் மாஸ்க் தான் ட்ரெண்டிங்கில் இருப்பதை உணர்ந்த பிரஸ்ஸி வெறும் மாஸ்க்கை வைத்து ஒரு அழகிய ஆடையை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். இதனால் மக்கள் அனைவரும் முழுவதும் பிரஸ்ஸிக்கு வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் மாஸ்க்கால் ஆன ஆடை சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது..

You'r reading மாஸ்க்கில் ஆடை வடிவமைத்து திருநங்கை சாதனை ஆச்சிரியத்தில் மூழ்கிய மக்கள்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 2ஜிபி + 32 ஜிபி: கியோனீ பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்