காஞ்சனா 3 மோஷன் போஸ்டர்: ஒரே நாளில் 20 லட்சம் வியூவ்ஸ் - மகிழ்ச்சியில் ராகவா லாரன்ஸ்

20 lakh views in one day for Kanchana 3 Motion Poster

காஞ்னா 3 படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் ஒரே நாளில் 20 லட்சம் வியூவ்ஸ் கிடைத்துள்ளதால் ராகவா லாரன்ஸ் உற்சாகத்தில் உள்ளார்.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் காஞ்சனா 3. ஏற்கனவே, முனி, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய திரைப்படங்கள் ஹிட் கொடுத்ததை அடுத்து, காஞ்னா 3 படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 3 படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமன், தேவதர்ஷினி ஆகியோர் நடிக்கின்றனர்.
திகில் படமான காஞ்சனா 3யை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 2017ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி சமீபத்தில் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காஞ்சனா 3 படத்தின் மோஷன் பிக்சர் பொங்கல் தினத்தன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் ஏற்கனவே அறிவித்தது. அதன்படி, நேற்று காலை காஞ்சனா 3 படத்தின் மோஷன் பிக்சர் வெளியிடப்பட்டது. மோஷன் பிக்சர் வெளியாகிய ஒரே நாளில் இரண்டு மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இதனால், மகிழ்ச்சியடைந்த ராகவா லாரன்ஸ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

You'r reading காஞ்சனா 3 மோஷன் போஸ்டர்: ஒரே நாளில் 20 லட்சம் வியூவ்ஸ் - மகிழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கனடாவில் தை பொங்கல் திருவிழா: பிரதமர் ஜஸ்டின் தமிழர்களுக்கு வாழ்த்து

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்