ஏய் கடவுளே.. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் 2வது சிங்கிள் டிராக்

2nd Single track from Ispade Rajavum Idhaya Raniyum Movie

ஹரிஷ் கல்யாண் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் 2வது சிங்கிள் டிராக் பாடல் நாளை ரிலீஸ் செய்யப்படுகிறது.

ரஞ்ஜித் ஜெயகொடி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் நடித்து வரும் படம் இஸ்பதே ராஜாவும் இதய ராணியும். ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இந்தபடத்தில் மா.கா.பா ஆனந்த் மற்றும் பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

சாம் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் முதல் சிங்கிள் டிராக் ஏற்கனவே வெளியாகிய நிலையில் ஏய் கடவுளே என்ற 2வது சிங்கிள் ட்ராக் நாளை மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்யப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்முதலாக பாடகராக அவதாரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading ஏய் கடவுளே.. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் 2வது சிங்கிள் டிராக் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மறைந்த பாடலூர் விஜய் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் - ரூ10 லட்சம் நிதியுதவி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்