விஜய் சேதுபதி, ஹரிஷ் கல்யாண் குரலில் ஏய் கடவுளே.. 2வது சிங்கிள் ட்ராக் இதோ..

Ispade Rajavum Idhaya Raniyum movie 2nd single release today

ஹரிஷ் கல்யாண் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் ரொமாண்டிக் படமான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் இருந்து ஏய் கடவுளே பாடல் ரிலீஸாகி உள்ளது.

ரஞ்ஜித் ஜெயகொடி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ள படம் இஸ்பதே ராஜாவும் இதய ராணியும். ரொமாண்டிக் காமெடி கதையில் உருவாகி வரும் இந்தபடத்தில் மா.கா.பா ஆனந்த் மற்றும் பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

சாம் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் முதல் சிங்கிள் டிராக் ஏற்கனவே வெளியாகிய நிலையில் ஏய் கடவுளே என்ற 2வது சிங்கிள் ட்ராக் நேற்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்த பாடலை, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஹரிஷ் கல்யாண் பாடியுள்ளனர்.

You'r reading விஜய் சேதுபதி, ஹரிஷ் கல்யாண் குரலில் ஏய் கடவுளே.. 2வது சிங்கிள் ட்ராக் இதோ.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வெனிசூலாவில் அதிபர் யார்? மதுரோவுக்கு ஆதரவாக ராணுவம் ...... கெய்டோவை ஆதரிக்கும் அமெரிக்கா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்