மொழிவது யாதெனில் பட டிரைலரை வெளியிட்டார் விஜய் சேதுபதி

Mozhivadhu Yadhalin Movie Trailer Release

மிமிக்ரி கலைஞரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள மொழிவது யாதெனில் படத்தின் டிரைலரை இன்று விஜய் சேதுபதி வெளியிட்டார்.

எஸ் எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மொழிவது யாதெனில். கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான தேஜ் இந்த படத்தில் பலகுரல் பேசும் மிமிக்ரி கலைஞராக நடிக்கிறார்.

இந்த படத்திற்கு நித்யன் கார்த்திக் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு கடந்த 2014ம் ஆண்டில் தொடங்கிய நிலையில் பல்வேறு காரணங்களால் படம் வெளியாவதில் இழுபறி இருந்தது. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மொழிவது யாதலின் படத்தின் டிரைலரை இன்று காலை 10.30 மணிக்கு விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

You'r reading மொழிவது யாதெனில் பட டிரைலரை வெளியிட்டார் விஜய் சேதுபதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிமுகவில் ஓரம்கட்டப்பட்ட ஜெ. விசுவாசி பொள்ளாச்சி ஜெயராமன்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்