சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் ட்ரைலர் இதோ..

Simbhu Vandha RajavaDhan Movie Trailer released

சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், நாசர், யோகிபாபு, ரோபோ ஷங்கர், மொட்டை ராஜேந்தர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன்.

இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. லைகா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் டீசர், பாடல்கள் ரிலீசானது. படம் வெளிவர இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், டிரைலர் ரிலீஸ் செய்யப்படாமலே இருந்து வந்தது.

இந்நிலையில், இன்று இரவு 10 மணிக்கு வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் சற்று நேரத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டிரைலர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

You'r reading சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் ட்ரைலர் இதோ.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இன்னும் சற்று நேரத்தில்.. வந்தா ராஜாவாதான் வருவேன் டிரைலர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்