நெடுநல்வாடை 2வது டீசரை வெளியிடும் ஆர்யா!

Arya will release 2nd teaser by Arya

நெடுநல்வாடை படத்தின் 2வது டீசரை ஆர்யா நாளை வெளியிடுகிறார்.

அறிமுக இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் பி-ஸ்டார் புரடக்ஷன் தயாரிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் நெடுநல்வாடை. நக்கீரர் எழுதிய சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள கவிதை தழுவிய கதை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பூ ராமு மற்றும் மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இவர்களைத் தவிர இளங்கோ, அஞ்சலி நாயர், நட்ராஜ், செந்தில்குமாரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜோஸ் பிராங்கிளின் இசையமைத்துள்ள பட பாடலுக்கு கவிப்பேரரசு வைரமுத்து வரிகளை எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் முதல் டீசரை ராட்சசன் இயக்குனர் ராம் குமார், 96 பட இயக்குனர் பிரேம் குமார், மேற்கு தொடர்ச்சி மலை இயக்குனர் லெனின் பாரதி ஆகியோர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி ரிலீஸ் செய்தனர்.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது டீசரை நடிகர் ஆர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் நாளை காலை 11 மணிக்கு ரிலீஸ் செய்கிறார்.

You'r reading நெடுநல்வாடை 2வது டீசரை வெளியிடும் ஆர்யா! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இனி வாழ்ந்தும் பயனில்லை' - மனைவியுடன் சேர முடியாததால் உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்