ldquoசுராங்கனி.. சுராங்கனி..rdquo பிரபல பாப் பாடகர் சிலோன் மனோகர் காலமானார்

சென்னை: இலங்கையின் பிரபல பாப் இசை பாடகரான சிலோன் மனோகர் நேற்று சென்னையில் காலமானார்.

சிலோன் மனோகர் என்று அழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் இலங்கையை சேர்ந்த பிரபல பாப் பாடகர். இவருக்கு வயது 73. பல மொழிப் பாடல்கள் பாடி மக்கள் மத்தியில் இசை சக்கரவர்த்தி என்ற பெயருடன் பாராட்டும் பெற்றவர். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் பாடிய, சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிக மாலுகெனாவா.. என்ற பைலா பாடலை பாடி இலங்கை, இந்திய ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றார். பாப் பாடல்களை தவிர, தமிழ், இந்தி திரைப்படங்கள் மற்றும் டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார்.
அதன் பிறகு, சினிமா துறையில் இருந்து விலகியே இருந்தார். இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவுக் காரணமாக நேற்று சென்னையில் அவர் காலமானார்.

You'r reading ldquoசுராங்கனி.. சுராங்கனி..rdquo பிரபல பாப் பாடகர் சிலோன் மனோகர் காலமானார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்