காஞ்சனா 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு! ஓவியா ஆர்மிக்கு ட்ரீட்

Kanchana 3 release date confirmed

நடிகர் ராகவா லாரன்ஸ் எழுதி, இயக்கிய முனி, காஞ்சனா , காஞ்சனா 2 படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது முனி நான்காம் பாகமாக உருவாகும் காஞ்சனா 3 திரைப்படத்தை இயக்கி, நடிக்கிறார் ராகவா லாரன்ஸ். இந்த திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இத்திரைப்படம் முதலில்  ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகும் என்றுக் கூறப்பட்டது. பின்னர் ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியானது.

ப்ரல் மாதம் வெளியாகும் என்ன சொல்லப்பட்ட திரைப்படம், தள்ளிப்போக இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டது.  ஏப்ரலில் நாடாளுமன்ற தேர்தல் வரும் என்பதால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கிறோம் என்று படக்குழு சொன்னது. அதுமட்டுமில்லாமல், ராகவா லாரன்ஸுக்கு படம் திருப்தியளிக்கவில்லை என்பதால் ஓவியாவை வைத்து மீண்டும் ரீஷூட் எடுத்திருப்பதாக சொல்லப்பட்டது. அதனால் படத்தை சொன்ன நேரத்தில் கொடுக்க முடியவில்லை என படக்குழு தெரிவித்தது.  தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் படத்தை வெளியிடும் தேதியையும் உறுதிசெய்துவிட்டனர். சம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல் 19 ஆம் தேதி உலகமெங்கும் ’காஞ்சனா 3’ வெளியாக உள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தல் தேதியை பொறுத்து படத்தை வெளியிட இருந்த படக்குழு, தேர்தல் நாளுக்கு அடுத்த நாள் இந்த படத்தை வெளியிட உள்ளது. ஓவியா ரசிகர்களுக்கு புது ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது.

You'r reading காஞ்சனா 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு! ஓவியா ஆர்மிக்கு ட்ரீட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கேப்டன் டூ சிப்பந்தி.. விஜயகாந்தை தாறுமாறாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்