தமிழில் கால் பதிக்கும் `கீதா கோவிந்தம் க்யூட் நாயகி

Karthi joins with geetha govindam heroin

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படம் பூஜையுடன் இன்று தொடங்கியது. 
 
 
கார்த்தி, ரகுல்ப்ரீத் சிங் நடிப்பில் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் தேவ். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. இந்நிலையில் மாநகரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்பொழுது கார்த்தி நடித்துவருகிறார்.
 
கைதி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம்,  ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால், இந்தப் படத்தில் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்டமாக ரெமோ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கிறார். இப்படம் பூஜையுடன் இன்று (மார்ச் 13) தொடங்கியுள்ளது.  இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரித்து வருகின்றனர். காமெடியனாக யோகி பாபு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்திற்கு இசை விவேக் மெர்வின். இது கார்த்தியின் 19வது படம் என்பது சிறப்பு தகவல். 
 
இந்தப் படத்தில், கார்த்தி ஜோடியாக கீதா கோவிந்தம் புகழ் ராஷ்மிகா மண்டன்னா நடிக்கிறார். இவர் தமிழில் அறிமுகமாகவிருக்கும் முதல் படம் இது. 

You'r reading தமிழில் கால் பதிக்கும் `கீதா கோவிந்தம் க்யூட் நாயகி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அட்டகாசமான முட்டை மசாலா வறுவல் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்