நயன்தாரா .. வெள்ளை யானை... ஐரா! - ஸ்வாரஸ்ய அப்டேட்

Nayanthara movie name explanation

கடந்த சில வருடங்களாகவே நயன்தாரா நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே ஹிட் ரகம் தான். உச்ச நடிகர்களுக்கு இணையான ஓபனிங்கையும் பெற்றுவருகிறார் நயன். நயன்தாராவுக்கு அடுத்து வெளியாக இருக்கும் படம் ஐரா. 
 
 
குறும்படங்கள் மூலமாக அறியப்பட்ட சர்ஜூன் இந்த படத்தை இயக்கிவருகிறார்.  நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் டீஸர் மற்றும் மேகதூதம், காரிகா போன்ற பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்போது ஐரா என்கிற தலைப்புக்கான விளக்கத்தை தெரிவித்துள்ளது படக்குழு.
 
இந்திரனோட வாகனம் தான் ஐராவதம். ஐராவதம் என்றால் வெள்ளை யானை என்று அர்த்தம். யானைகள் தங்களோட அசாதாரண நியாபக சத்தியினாலும், சிந்திக்கும் திறமையினலும தங்களின் வஞ்சத்தை பழிதீர்த்துக் கொள்ளும். அதுபோல, நாயகி நயன்தாராவும் படத்தின் புத்திசாலி தனத்தினால் எதிரிகளை எப்படி பழிவாங்குறாங்க என்பது தான் படத்தின் டைட்டில் விளக்கம். ஐரா திரைப்படம் வருகிற 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. 
 
 
இப்படம் மட்டுமின்றி,  மிஸ்டர். லோக்கல், கொலையுதிர்காலம், சைர நரசிம்ம ரெட்டி, விஜய் 63, உள்ளிட்ட படங்களிலும் நடித்துவருகிறார் நயன்தாரா என்பதும் கூடுதல் தகவல். 

You'r reading நயன்தாரா .. வெள்ளை யானை... ஐரா! - ஸ்வாரஸ்ய அப்டேட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழில் கால் பதிக்கும் `கீதா கோவிந்தம்’ க்யூட் நாயகி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்