விஜய் சேதுபதியின் ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் புரோமோ வீடியோ ரிலீஸ்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன். இந்த படத்தில் விஜய் சேதுபத பல கெட்டப்பில் நடித்துள்ளார். இந்த படம் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ளது.

இந்தப் படத்தில், கவுதம் கார்த்திக்கின் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்படும் என இயக்குனர் கூறியிருந்தார்.

படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் புரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 2ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading விஜய் சேதுபதியின் ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் புரோமோ வீடியோ ரிலீஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பேருந்து கட்டண குறைப்பு கண்துடைப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ளது -மு.க.ஸ்டாலின்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்