கமல் வரிசையில் இளம் நடிகர் அதர்வா.. வைரலாகும் வீடியோ

Actor Atharvaa make up video goes viral

இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்,`பூமராங்'. அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, சதீஷ், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.  `மசாலா பிக்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் விவசாயத்தைப் பற்றியும் நதிநீர் இணைப்பு பற்றியும் பேசியிருக்கிறது. இப்படம் மார்ச் 1-ம் தேதி வெளியானது.  

பூமராங்  படத்தில் சில காட்சிகளில் அதர்வா முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது போல் தோன்றுவார். அதற்காக கைத்தேர்ந்த பிராஸ்தடிக் மேக்கப் (Prosthetic makeup ) கலைஞர்களைக் கொண்டு அவருக்கு தலை முழுவதும் மேக்கப் போடப்பட்டுள்ளது.

அதர்வா நடித்த படங்களில் பிராஸ்தடிக் மேக்கப் உடன் நடித்தது இதுவே முதல் முறை. அவர் இந்தக் கேரக்டருக்கு எப்படித் தயாராகிறார், ஒப்பனைக் கலைஞர்கள் அவருக்கு எப்படி தீக்காயம் ஏற்பட்டது போலான முகத்தை வரவைக்கிறார்கள் என்பதை படக்குழு வீடியோவாக பதிவு செய்துள்ளது. தமிழ் ஊடகத்தின் யூ ட்யூப் பக்கத்தில் இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. தசாவதாரம் படத்தில் கமல் மேக் அப் போட்டு கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலானதுப் போன்று அதர்வாவின் மேக் அப் வீடியோ ஹிட் அடித்துள்ளது!

வீடியோ லின்க் : https://goo.gl/6rG4Wm

You'r reading கமல் வரிசையில் இளம் நடிகர் அதர்வா.. வைரலாகும் வீடியோ Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரிலீஸ் தேதியை மாற்றிக் கொண்ட விஷால், ராகவா லாரன்ஸ்! சுவாரஸ்ய தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்