கன்னடத்தில் உருவாகும் பரியேறும் பெருமாள்.. லீட் ரோலுக்கு போட்டிப் போட்ட முன்னணி ஹீரோக்கள்

Mari selvarajs pariyerum perumal goes to kannada cinema

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில், வெளியான பரியேறும் பெருமாள் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. `மாற்று சினிமா’, என்று அனைவராலும் கொண்டாடப்பட்டது.

ரசிகர்களின் பேராதரவும், சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’.  இந்தப்படம் இப்பொழுது கன்னடத்திற்கு போகிறது. கன்னட மொழியில் தயாராகவிருக்கிறது.  களவாணி மாப்பிள்ளை - 2 படத்தை இயக்கிய காந்தி மணிவாசகம் இப்படத்தை இயக்குகிறார்.  தமிழிலும், கன்னடத்திலும் முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டு கன்னடத்தில் உருவாகப் போகும் இப்படத்தில் நடிக்க முன் வந்தனர். ஆனால், இந்தப் படத்தை இயக்கவிருக்கும் காந்தி மணிவாசகம், இந்தப்படத்திற்கு இமேஜ் இல்லாத புதுமுக நடிகர் நடித்தால் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தார். இறுதியாக ஏவிஎம் நிறுவனத்தின் மருமகன் மைத்ரேயா என்ற புதுமுக நடிகரை கதாநாயகனாக தேர்வு செய்திருக்கிறார்.

இவரை படத்தின் கதைக்களமாக விளங்கும் பெங்களூர் பகுதிகளிலும், அங்கு வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஒட்டி பழக வைத்தார். நடிகர் மைத்ரேயாவும் அந்த மக்களோடு மக்களாக இணைந்து அவர்களுடன் பழகி அவர்களின் பேச்சு, நடை, உடை, பாவனை அனைத்தையும் கற்றுக் கொண்டு வருகிறார். கன்னட பட உலகில் முன்னணியிலுள்ள கதாநாயகி, வில்லன் நடிகர், கதைக்கு ஏற்ற வகையில் உள்ள கலைஞர்களையும் தேர்வு செய்து வருகிறார்கள். விரைவில் இந்தப் படத்திற்கான துவக்க விழா பெங்களூரில் நடைபெறவிருக்கிறது.

 

You'r reading கன்னடத்தில் உருவாகும் பரியேறும் பெருமாள்.. லீட் ரோலுக்கு போட்டிப் போட்ட முன்னணி ஹீரோக்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவனுக்கு 'பானை' சின்னம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்