சூர்யாவை ஈர்த்த உறியடி இயக்குநர்.. பெரிய படத்தில் வாய்ப்பு

Suriya admired Uriyadi director

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கவிருக்கும் படத்தில் வசனம் எழுத உறியடி இயக்குநர் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார்.

சூர்யா நடிப்பில் ரிலீஸூக்கு, செல்வராகவனின் என்.ஜி.கே. படமும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படமும் தயாராகிவருகிறது. ரகுல் ப்ரீத் சிங், சாய்பல்லவி என இரண்டு நாயகிகள் நடிக்கும் என்.ஜி.கே, படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகிறது. அதுபோல மோகன்லால், சயிஷா, ஆர்யாவுடன் நடிக்கும் காப்பான் படத்துக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துவருகிறார்.

இவ்விரண்டு படங்களும் முடிந்த கையோடு, இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். சூர்யாவின் 38வது படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தில் உறியடி இயக்குநர் விஜயகுமார் வசனம் எழுதவிருக்கிறார்.

விஜயகுமார் இயக்கத்தில் உறியடி 2 படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யா தான் தயாரித்துவருகிறார் என்பது அனைவரும் தெரிந்த செய்தியே. உறியடி 2 வின் ஸ்கிரிப்டும், பட காட்சிகளையும் பார்த்துவிட்ட சூர்யா, சுதா கொங்கரா இயக்கும் படத்தில் இவர் வசனம் எழுதினால் நன்றாக இருக்கும் என விரும்பி, விஜயகுமாரை ஒப்பந்தமும் செய்திருக்கிறாராம்.

You'r reading சூர்யாவை ஈர்த்த உறியடி இயக்குநர்.. பெரிய படத்தில் வாய்ப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விக்ரம், சிம்பு, கார்த்தி, விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் மணிரத்னத்தின் கனவுப்படம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்