சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தில் விஜய்.. சுவாரஸ்ய தகவல்

Vijay acts in 100th super good film

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவத்திற்கு ஒரு படம் நடிக்கவிருக்கிறார் விஜய்.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லீ கூட்டணி ‘தளபதி 63’படப்பிடிப்பு தற்பொழுது நடந்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தவிர, வில்லன் கேரக்டரில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் நடிக்கிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்தப் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. என்னவென்றால் பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி போன்ற படங்களை விஜய்க்கு ஹிட் கொடுத்த படங்கள். இப்படங்களை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

சமீபத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, ‘எங்கள் நிறுவனம் நூறாவது படத்தை தயாரிக்கவிருக்கிறது. அதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் ’என்று விஜய்யிடம் கேட்டிருக்கிறார். அதற்கு விஜய்யும் எந்த தயக்கமும் இன்றி உடனே சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். விஜய்யின் 64 படத்தின் இயக்குநர் யாரென்பது சில நாட்களில் தெரிந்துவிடும். ஆக, சூப்பர் குட் பிலிம்ஸின் நூறாவது படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.

You'r reading சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தில் விஜய்.. சுவாரஸ்ய தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நள்ளிரவில் வெளியான சூர்யா பட அப்டேட்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்