ராதாரவி பேசியதை விட மேடையில் நடந்தது அதிர்ச்சியா இருக்கு.. நயன்தாராவின் ஸ்டேட்மெண்ட் nbspnbsp

Radharavi controversy, nayanthara thanked stalin

இரண்டு நாட்களுக்கு முன்பு கொலையுதிர் காலம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ராதாரவி, நயன்தாரா குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கொலையுதிர் காலம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ராதாரவி பேசியது, `` நயன்தாரா நல்ல நடிகை. அவர் இவ்வளவு காலம் திரையுலகில் நிலைப்பதே பெரிய விஷயம். ஏனென்றால் அவரைப் பற்றி வராத கிசுகிசுக்களே கிடையாது. அதெல்லாம் தாண்டி அவர் வெற்றிகரமாக நிற்கிறார். நயன்தாரா ஒரு படத்தில் பேயாகவும் நடிக்கிறார், இன்னொரு படத்தில் சீதாவாகவும் நடிக்கிறார். இப்போதெல்லாம் யாரு வேண்டுமானாலும் சீதாவாக நடிக்க முடியும். முன்பெல்லாம் சீதாவாக நடிக்க வேண்டும் என்றால் கே.ஆர். விஜயா தான் தேடுவார்கள். கே.ஆர். விஜயாவை பார்த்தால் கும்பிடத் தோன்றும். இப்போதெல்லாம் பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்’ என்று பேசினார். இதனையடுத்து ராதாரவி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

மேலும் திமுக தலைவர் ஸ்டாலின்  ராதாரவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் ஸ்டாலினுக்கு  நன்றி தெரிவித்து நடிகை  நயன்தாரா 2 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

என் தொழில் ரீதியை தவிர்த்து மற்ற எந்த வகையிலும் நான் அறிக்கை வெளியிடுவதில்லை. ஆனால் சமீபத்தில் உணர்வற்ற மற்றும் பாலியல் ரீதியாக சில ஆண்கள் கருத்து தெரிவித்ததால், நான் என் நிலைப்பாட்டை தெரிவிக்கும் கட்டாயத்திற்கு தற்போது ஆளாக்கப்பட்டுள்ளேன்.

பெண்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்த ராதா ரவி மீது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். அவருக்கு முதலில் என் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் பெண்களால் தான் இந்த பூமிக்கு வந்தார்கள்.  இதனை ராதாரவிக்கு நினைவூட்ட விரும்புகிறேன். பெண்களை கீழ்த்தரமாக பேசி, பாலியல் ரீதியாக கருத்தை தெரிவிப்பது பெருமை என்ரு சில ஆண்கள் நினைக்கின்றனர்.  இது மிகவும் வருத்ததிற்குரியது. 

ஒரு அனுபவம் வாய்ந்த மூத்த நடிகர் என்ற அடிப்படையில் ராதா ரவி இளம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக செயல்பட வேண்டுமே தவிர தவறான பாதையில் வழிநடத்தக்கூடாது. 

விளம்பரத்திற்காகவும், கவனத்தை தனது பக்கம் திருப்புவதற்காகவும் இதுபோன்று பேசுவதை ராதாரவி போன்ற நடிகர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அவரது அவ்வாறு பேசும்போது மேடையில் இருந்த ஆண்கள் சிலர் கைத்தட்டி வரவேற்றதுதான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்படி செய்தால்,  ராதாரவி இதுபோன்று தொடர்ந்து பேசுவார். 

எனவே இதுபோன்ற பேச்சுகளை தயவுசெய்து ஊக்கப்படுத்த வேண்டாம்.  கடைசியாக புகார்களை விசாரிக்க உச்ச நிதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி விசாகா கமிட்டியை எப்போது அமைப்பீர்கள் என்று நடிகர் சங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

You'r reading ராதாரவி பேசியதை விட மேடையில் நடந்தது அதிர்ச்சியா இருக்கு.. நயன்தாராவின் ஸ்டேட்மெண்ட் nbspnbsp Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சொன்னதை செய்த சீமானின் 20-20 - இருபது பெண் வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்