திருமணத்திற்கு முன்பே நடிகை எமி ஜாக்சன் கர்ப்பம் இன்ப அதிச்சியில் ரசிகர்கள்

Amy Jackson Announces Pregnancy, Amy conform Pregnancy

பிரபல நடிகை எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கருவுற்று இருக்கும் தகவலை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடையச் செய்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு வெளியான மதராசபட்டினம் திரைப்படம் மூலம் திரையுலகில் தடம் பதித்தவர் எமி ஜாக்சன் ஆவார். தெலுங்கு, கன்னடம், இந்தி திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தமிழில் அவரது நடிப்பில் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 2.o திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கருவுற்று இருக்கும் தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வீட்டுக் கூரையின் உச்சியில் நின்றபடி இந்த மகிழ்ச்சியான செய்தியை உரக்க கூற விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். காதலர் ஜார்ஜ் பனயிட்டோ மீது உலகின் விலைமதிப்பற்ற காதலை வைத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ்வுடன் ஆங்கில புத்தாண்டு தினத்தில் எமி ஜாக்சனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


You'r reading திருமணத்திற்கு முன்பே நடிகை எமி ஜாக்சன் கர்ப்பம் இன்ப அதிச்சியில் ரசிகர்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா –தனியார் பள்ளிகளை எச்சரிக்கும் கல்வித்துறை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்