பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் ரம்யா கிருஷ்ணன்.. கெத்து போங்க

Ramya krishnan to act with amitabh bachchan

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ள ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.  மிஷ்கின் மனைவியாகவும், ஆபாசப்பட நடிகையாகவும் இந்தப் படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு கூடுதல் கிளாப்ஸ் கிடைத்தது. படையப்பா நீலாம்பரி, பாகுபலி சிவகாமி என ரம்யா கிருஷ்ணன் கெத்தான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இந்நிலையில் தற்போது பாலிவுட் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘கள்வனின் காதலி’ படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கும் ‘உயர்ந்த மனிதன்’ படத்தின் புகைப்படஙக்ள் வெளியாகி வைரலானது. எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம், தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் உருவாகிறது.இந்த படத்தில் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருக்கிறாராம்.

You'r reading பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் ரம்யா கிருஷ்ணன்.. கெத்து போங்க Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கெய்லை எடுக்காமல் சொதப்பிய பஞ்சாப் - டெல்லி அணிக்கு 167 ரன்கள் இலக்கு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்