கோடம்பாக்கத்தை நோக்கி வரும் ஆர்எக்ஸ்100 புயல்!

RX 100 heroine debuts in Kollywood film

பஞ்சாபில் பிறந்த பஞ்சுமிட்டாயான பயல் ராஜ்புத், பஞ்சாபி படமான சன்னா மீரய்யா படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். நம்ம ஊர் பிரியா பவானி சங்கர் போல இவரும், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து, பின்னர் சினிமாவுக்கு வந்தவர் தான்.

இந்த பஞ்சாபி அழகியை பார்த்த தெலுங்கு திரையுலகம், RX 100 படத்தின் நாயகியாக மாற்றியது. கடந்த ஆண்டு வெளியான RX 100 படம் மாபெரும் வெற்றியை அடைந்தது மட்டுமின்றி, அதன் பாடல்கள் தமிழ்நாட்டிலும் பிரபலமாக பரவி, ரசிகர்களின் மனங்களை கவர்ந்தது.

என்.டி.ஆர் கதாநாயகுடு படத்தில் ஜெயசுதா வேடத்தில் நடித்தும் பயல் ராஜ்புத் அசத்தினார்.

தெலுங்கு மற்றும் பஞ்சாபி மொழிப் படங்களில் பிசியாக இருக்கும் இவரை, உதயநிதி ஏஞ்சல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கொண்டு வருகின்றனர்.

கே.எஸ். அதியமான் இயக்கத்தில், ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகும் ஏஞ்சல் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி மற்றும் பயல் ராஜ்புத் ஆகிய இரு நாயகிகள் கமீட் அகியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை ரசிகர்களை கவர தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் பயல் ராஜ்புத்.

You'r reading கோடம்பாக்கத்தை நோக்கி வரும் ஆர்எக்ஸ்100 புயல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ‘அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்’ – ஹர்பஜன் சிங் அதிரடி ட்வீட்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்