அயன்மேனுக்கு விஜய்சேதுபதி வாய்ஸா? ஐயோ சகிக்கல.. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் தமிழ் ட்ரெய்லரை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

Avengers: Endgame Tamil Trailer release, vijaysethupathi gave voice to Iron man gets troll

உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் தமிழ் ட்ரெய்லரை சமூக வலைதளத்தில் நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

ட்ரெய்லரை வெளியிட்டது மட்டும் அல்லாமல், மார்வெல் உலகின் சூப்பர்ஸ்டாரான டோனி ஸ்டார்க் மற்றும் அயன்மேன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகர் டோனி ஸ்டார்க்குக்கும் விஜய்சேதுபதி வாய்ஸ் கொடுத்துள்ளார்.

விஜய்சேதுபதியின் வாய்ஸில் வெளிவரும் அவரது பட ட்ரெய்லர்கள் ஹிட்டடித்து வரும் நிலையில், அந்த யுக்தியை இந்த படத்திற்கும் வைக்க, அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கு தமிழ் வசனம் எழுதிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் முடிவு செய்து வைத்துள்ளார்.

ஆனால், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் மார்வெல் சீரிஸ் படங்களில் வெளியான அயன்மேன் வாய்ஸ் தான் நல்லா இருக்கு.. விஜய்சேதுபதி வாய்ஸ் கொஞ்சம் கூட ஷூட் ஆகல, என ட்ரெய்லர் கமென்டிலேயே ரசிகர்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர். மேலும், பலர், முதன்முதலாக டிஸ்லைக் போடுவதாகவும், படத்தில், பழைய டப்பிங் ஆர்டிஸ்ட் குரலே மீண்டும் வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அயன்மேன் குரலுக்கு விஜய்சேதுபதி வாய்ஸ் கொடுத்திருப்பது போல, பிளாக் விடோ கதாபாத்திரத்துக்கு நடிகை ஆண்ட்ரியா குரல் கொடுத்துள்ளார்.

விஜய்சேதுபதியின் குரலைத் தவிற “கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுவோம்” என சூப்பர் ஹீரோக்கள் செய்யும் சபதம் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் தமிழ் ட்ரெய்லருக்கு பலம் சேர்த்துள்ளது.

வரும், ஏப்ரல் 26-ம் தேதி உலகின் பல மொழிகளில் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படம் வெளியாகிறது.

You'r reading அயன்மேனுக்கு விஜய்சேதுபதி வாய்ஸா? ஐயோ சகிக்கல.. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் தமிழ் ட்ரெய்லரை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சொந்த மண்ணிலே டெல்லி அணி துவம்சம்; பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்த ஐதராபாத் அணி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்