`முன்பணமா 100 கோடி தர்றோம்.. - மும்பை தயாரிப்பு நிறுவனத்தின் அழைப்பை மறுத்து மாஸ் காட்டிய விஜய், அஜித்

Vijay and ajith rejected Mumbai production company offer

அட்லீ இயக்கத்தில்  ‘தளபதி 63’ படத்தில் நடித்துவருகிறார் விஜய். ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவருகிறார் அஜித்.

அட்லீ படத்துக்குப் பிறகு, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படத்தை நடிக்க இருக்கிறார் விஜய். அதுபோல நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு, மீண்டும் போனிகபூர் தயாரிப்பில் இன்னொரு படம் நடிக்க இருக்கிறார் அஜித்.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் அஜித், விஜய் என இரண்டு பேரும் கேட்கிற சம்பளத்தைக் கொடுத்து நான்கு படங்களை தொடர்ந்து நடிக்க இருவரையும் ஒப்பந்தம் செய்ய நிறுவனத்தின் அதிகாரிகளை சமீபத்தில் அனுப்பியுள்ளது. நான்கு படத்தின் சம்பளத்தில் இரண்டு படத்தின் சம்பளத்தை முன்பணமாக தரவும் தயாராக இருக்கிறார்கள்.  படத்தின் சம்பளம்,  வரி, படப்பிடிப்பில் தங்குவது உள்ளிட்ட வசதிகளையெல்லாம் சேர்த்து ஐம்பது கோடி வரை இருவரும் வாங்குகிறார்கள் . ஆக விஜய், அஜித் என இருவருக்கும் முன்பணமாக  நூறு கோடி தர தயாராக இருக்கிறார்கள் என்கிற செய்தி விஜய், அஜித் என இருவரின் காதுகளுக்கும் சென்றிருக்கிறது.

விஜய், அஜித் என இருவருமே அந்த மும்பையை மையமாக கொண்ட தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரிகளை சந்திக்க மறுத்துவிட்டார்களாம் . இரண்டு படங்களின் சம்பள வீதமான நூறு கோடியை பெரியதாக எண்ணாமல் நிகாரத்திருக்கிறார்கள் இருவரும். இதனால் தமிழ் திரையுலக தயாரிப்பாளர்கள் பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் இதை பேசிவருகிறார்கள்.

சிம்புக்கு திருமணம்? இப்படி பட்ட பெண்ணை விட...! –டி.ராஜேந்தர் ‘பளார்’

தமிழன் சும்மா இருப்பானா...சொல்லுங்க? அதற்கு சின்மயிதான் காரணம்! –தயாரிப்பாளர் ஆவேசம்

சிவகார்த்திகேயனின் ’மிஸ்டர் லோக்கல்’ ரிலீஸ் எப்போ தெரியுமா?

ஓட்டுப் போட்ட சின்மயியை கலாய்த்த தமிழ்பட இயக்குநர்!

எனக்கா ஓட்டு இல்லை; போராடி உரிமையை பெற்ற சிவகார்த்திகேயன்!

You'r reading `முன்பணமா 100 கோடி தர்றோம்.. - மும்பை தயாரிப்பு நிறுவனத்தின் அழைப்பை மறுத்து மாஸ் காட்டிய விஜய், அஜித் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜெயபிரதா காக்கி ஜட்டி போட்டிருக்கிறார்; மோசமாக விமர்சித்த சமாஜ்வாதி வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்