அஜித் பிறந்தநாளன்று வெளியாகும் தேவராட்டம் திரைப்படம்.. ஏன் தெரியுமா

Devarattam movie set to release in ajith birthday

கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள தேவராட்டம் படம், மே ஒன்றாம் தேதி வெளியாகும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.


கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான மிஸ்டர்.சந்திரமௌலி படம் தோல்வியடைந்தது. எனவே கவுதம் கார்த்திக் 'தேவராட்டம்' படத்தை நம்பிக்கொண்டிருக்கிறார். கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன்,சூரி, ராஜ்கிரண், கோவை சாராளா, ஜகபதி பாபு, கலையரசன், மன்சூர் அலி கான், ஆனந்தராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ளது ‘தேவராட்டம்’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. 'தேவராட்டம்', 'Mr.லோக்கல்', 'தேள்', 'காட்டேரி', 'டெடி', ’மகாமுனி’ உள்ளிட்ட பல படங்களை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. மே 1 ஆம் தேதி மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் இறுதிகட்ட பணிகள் முடியாததால் மே 1 ஆம் தேதி தேவராட்டம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது.


இந்த படத்தை தொடர்ந்து, கவுதம் கார்த்திக் அறிமுக இயக்குனர் அருண் சந்திரன் இயக்கும் புதியபடத்தில் நடிக்க இருக்கிறார். பேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்துக்கு செல்லப்பிள்ளை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூரி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இது தொடர்பாக ஸ்டூடியோ கிரீன் பதிவிட்ட ட்வீட்டில், "மதுர பளபளக்க வருகிறது தேவராட்டம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.  கவுதம் கார்த்திக் தீவிர அஜித் ரசிகராம். அதனால் தான் அவரின் படம் அஜித் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளியாவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் ’மிஸ்டர் லோக்கல்’ ரிலீஸ் எப்போ தெரியுமா?

You'r reading அஜித் பிறந்தநாளன்று வெளியாகும் தேவராட்டம் திரைப்படம்.. ஏன் தெரியுமா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொடைக்கானலில் துவங்கியது மலர் கண்காட்சி; சுற்றுலா பயணிகள் படையெடுப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்