விஜய் சேதுபதிக்கு ஜோடியான ஸ்ருதிஹாசன்

Vijay Sethupathi and Shruti Haasan to team up next

ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற படங்கள தயாரித்த விஜய் சேதுபதி புரோடக்‌ஷன் மற்றும் 7 சிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் படம் ‘லாபம்’.


இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக கமல் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். இரண்டு வருடங்களாக தமிழ் சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்த ஸ்ருதிஹாசன் தற்போது லாபம் படம் மூலமாக தமிழுக்கு ரீண்ட்ரி கொடுக்கிறார். இந்த படத்தை இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு ஆகிய தரமான படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் ஜெகபதிபாபுவும் ஒரு முக்கிய கேரட்டரில் நடிக்கிறார். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்துக்கான ஷூட்டிங் பூஜையோடு தொடங்கியிருக்கிறது.

ஒரே ஒரு போட்டோ கேட்டோம்; தர்ம அடிதான் கிடைச்சுது! விஜய் சேதுபதியின் திடீர் மாற்றத்தால் குமுறும் ரசிகர்கள்

You'r reading விஜய் சேதுபதிக்கு ஜோடியான ஸ்ருதிஹாசன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல தயாராகிறார் விஜயகாந்த்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்