தர்பார் ஷூட்டிங் ஸ்டில்ஸ்: ரஜினியை தொடர்ந்து நயன்தாரா லுக்கும் லீக்!

Darbar shooting Nayanthara Looks also leaked

தர்பார் படத்தில் கலந்து கொண்ட நயன்தாராவின் புகைப்படமும் இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகின்றன.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் தர்பார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் நயன்தாரா 2 நாட்களுக்கு முன்னர் இணைந்தார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் அறிவித்தது.

மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில், ரஜினிகாந்த், நிவேதா தாமஸ் மற்றும் யோகி பாபு இருந்த புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி வைரலாகின.

இந்நிலையில், தற்போது தர்பார் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நடிகை நயன்தாராவின் லுக்கும் லீக் ஆகி வைரலாகியுள்ளது.

வெள்ளை நிற டிசைனர் சாரியில் கொண்டை போட்டு மாஸ் லுக்கில் நயன்தாரா நடந்து வரும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

பேட்ட படத்தைப் போலவே தர்பார் பட ஸ்டில்களும் நாள்தோறும் லீக் ஆகி வருவதால், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பயங்கர அப்செட் ஆகியுள்ளார். மேலும், ஷூட்டிங் நடக்கும் பகுதிக்குள் பயங்கர கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தளபதி 63 பட ஷூட்டிங்கில் திடீரென ஏற்பட்ட விபத்து; ஒருவர் படுகாயம்

You'r reading தர்பார் ஷூட்டிங் ஸ்டில்ஸ்: ரஜினியை தொடர்ந்து நயன்தாரா லுக்கும் லீக்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 30 ஆண்டுகளாக குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்ட நர்ஸ்: வாட்ஸ் அப் ஆடியோவால் போலீசில் சிக்கினார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்