இனிமே என்ன யோகிபாபுவுடன் கம்பேர் பண்ண முடியாது மீண்டும் பழைய ஃபார்முக்கு மாறிய சிம்பு!

Simbu lost his heavy weight and come back to form

ஒழுங்கா ஷூட்டிங் வர மாட்டேங்குறாரு.. நல்லா தூங்குறாரு.. நைட் ஷூட் வைக்க சொல்றாரு என பல கம்ப்ளைண்டுகளை காலி செய்து, மீண்டும் தமிழ் சினிமாவில் அதிரடியாக நடிக்க களமிறங்கிய சிம்புவுக்கு மிகப்பெரிய மைனஸாக அமைந்தது அவரது உடல் எடை தான்.

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்துல வாங்க மச்சான் வாங்க பாட்டுல சிம்பு கஷ்டப்பட்டு ஆடினார் என்றும், சிம்புவுக்கும் யோகிபாபுவுக்கும் வித்தியாசமே தெரியல என ப்ளூ சட்டை மாறன் உள்பட பலரும் ஓபனாகவே கிண்டல் அடித்தனர்.

இந்நிலையில், மாநாடு படத்திற்காக, தனது உடல் எடையை குறைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த சிம்பு, தனது தம்பி குறளரசன் திருமணத்தில் கலந்து கொள்ள வெளிப்பட்டுள்ளார்.

மீண்டும் பழையபடி மாறியுள்ள சிம்புவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிப்பதற்கு முன், நடிகர் கெளதம் கார்த்திக்குடனும் ஒரு படத்தில் சிம்பு கமீட் ஆகியுள்ளார்.

மேலும், நடிகர் எம்.ஆர்.ராதா வாழ்க்கை வரலாறு படத்தில் சிம்பு எம்.ஆர்.ராதாவாகவும் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராகவும் நடிக்கிறார்கள் என்ற வதந்தியும் பரவி வருகிறது. ஆனால், அதற்கு எம்.ஆர்.ராதா பயோபிக்கை இயக்கும் அவரது பேரன் இயக்குநர் ஜக் அதனை வதந்தி எனக் கூறியுள்ளார்.

நீங்களும் தானோஸ் ஆகலாம்; கூகுள் உருவாக்கிய சூப்பர் ஐடியா!

You'r reading இனிமே என்ன யோகிபாபுவுடன் கம்பேர் பண்ண முடியாது மீண்டும் பழைய ஃபார்முக்கு மாறிய சிம்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கையில் ரூ.38,750 மட்டுமே உள்ளது..கார் இல்லை! –மோடி தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்