அம்மாடியோ.. ரேவதியா இது... கெத்து போஸ்டர்

Jyothika next movie title revealed

ஜோதிகா நடித்துவரும் ஜாக்பாட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

காற்றின் மொழி படத்துக்குப் பிறகு, ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் படத்துக்கு ஜாக்பாட் என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரபுதேவா நடிப்பில் வெளியான குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி இருக்கும் போஸ்டர் தற்பொழுது வெளியாகியிருக்கிறது. ஜோதிகாவும் ரேவதியும் இப்படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர்.

ஜோதிகாவுடன் ரேவதி, யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூரலிகன், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது. திட்டமிட்டபடி 35 நாட்களில் படப்பிடிப்பையும் முடித்தது படக்குழு. பின்னர், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளையும் உடனே தொடங்கியது படக்குழு. இந்நிலையில் தற்பொழுது பெயருடன் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துவருகிறது.
ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துவருகிறார். காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தின் வெளியீடு சீக்கிரத்தில் எதிர்பார்க்கலாம்.

You'r reading அம்மாடியோ.. ரேவதியா இது... கெத்து போஸ்டர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அடுத்த விராட் கோலி; அஸ்வினின் திறமை - கிறிஸ் கெய்ல் ஓப்பன் டாக்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்