அண்ணான்னு கூப்டுறல என்னை நீ நம்புறல.. நான் வருவேன் - 100 டிரைலர் ரிலீஸ்!

100 movie trailer release

அதர்வா, ஹன்சிகா நடிப்பில் வரும் மே 9ம் தேதி வெளியாகவுள்ள 100 படத்தின் ஆக்‌ஷன் தெறிக்கும் டிரைலர் ரிலீசாகியுள்ளது. போலீஸில் பல கனவுகளுடன் சேரும் அதர்வா, அவசர அழைப்பு எண்ணான டயல் 100 கால் செண்டர் பிரிவில் பணியில் அமர்த்தப்படுகிறார்.

சமீபத்தில் வெளியான பொள்ளாச்சி பாலியல் சம்பவ வீடியோவில் ஒரு பெண் அண்ணா என கதறும் வீடியோ தமிழக மக்களின் இதயங்களை உலுக்கின. அந்த ஸ்பார்க்கை இந்த படத்தில் வைத்துள்ள இயக்குநர் சாம் ஆண்டன், 100க்கு டயல் செய்து அபய குரலில் அலறும் பெண்ணை காப்பாற்ற போராடும் கதையாக 100 படம் உருவாகியுள்ளது.

அதர்வாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் ஹன்சிகா நடித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான குலேபகாவலி படம் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்த படம் ஹன்சிகாவுக்கு திருப்புமுனையாக இருக்குமா? என்பது மே 9ம் தேதி படம் வெளியானவுடன் தெரிந்துவிடும்.

அவுரா சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். எருமை சாணி விஜய், ராதாரவி, ஆடுகளம் நரேன் மற்றும் சரவணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செல்ல நாய்க்குட்டியுடன் அதுல்யா செய்யும் சேட்டையை நீங்களே பாருங்க!

You'r reading அண்ணான்னு கூப்டுறல என்னை நீ நம்புறல.. நான் வருவேன் - 100 டிரைலர் ரிலீஸ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வாகன சோதனையின் போது ரூ.50 லட்சம் மதிப்பிலான குட்கா சிக்கியது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்