ஃபேஷன் விரும்பிகளுக்கான ஃபுல் மீல்ஸாக களைகட்டிய மெட்காலா 2019!

Met Gala stars compete to be the queen of camp on most OUTRAGEOUS pink carpet yet

கிம் கர்தாஷியான், செரினா வில்லியம்ஸ், லேடி காகா, பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே என உலகின் உள்ள அழகு மங்கைகள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்ற மெட்காலா 2019 நிகழ்ச்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.

பேய் மாதிரி மேக்கப் போட்டுக் கொண்டு ஃபேஷன் மீது தனக்கு தீரா காதல் இருக்கிறது என தனது கணவர் நிக் ஜோனஸுடன் பிங்க் கார்பெட்டை அலங்கரித்தார் பிரியங்கா சோப்ரா.

இந்த ஆண்டு ரெட் கார்பெட்டுக்கு பதில் பிங்க் கார்பெட் போடுகிறார்கள் என்பதை அணிந்து பிங்க் நிற உடையில் பார்பி பொம்மை போல அழகாக அணிவகுத்தார் தீபிகா படுகோனே.

பியூட்டி அண்ட் தி பீஸ்ட் படத்தில் வரும் மெழுகுவார்த்தி சாண்டலியர் பொம்மை போல கேட்டி பெர்ரி பிங்க் கார்பெட்டில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் அசத்தினார்.

பாடகி கார்டிபியின் பிரம்மாண்ட றெக்கைகள் கொண்ட கவுனில் 30 ஆயிரம் றெக்கைகள் இருந்தன. இந்த ஆடையை 35 பேர் 2000 மணி நேர கடின உழைப்பைக் கொட்டி செய்துள்ளனர்.

கிம் கர்தாஷியன் நியூட் மெய்சன் மர்க்ளர் ஆடையில் படு கவர்ச்சியாக மெட்காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஜென்னர் சகோதரிகளான கெண்டல் ஜென்னர், கைலி ஜென்னர் மற்றும் கிறிஸ் ஜென்னர் கார்ட்டூன் கதாபாத்திரங்களைப் போல உடை அணிந்து வந்து மெட்காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் கண்களுக்கு விருந்தளித்தனர்.

லேடிகாக பிரம்மாண்ட பிங்க் நிற உடையில் மெட் காலாவில் கலந்து கொண்டு பின்னர், ஒன்றன் பின் ஒன்றாக ஆடைகளை களைந்து கடைசியில் பிகினி லுக்கில் மெட்காலாவில் கவர்ச்சி விருந்தளித்தார்.

பிரபல மாடல் அழகி எமிலி ரதஜ்கோஸ்கி டுண்டாஸ் ஆடையில் உடல் பாகங்கள் தெரியும்படி கிரேக்க கடவுள் போல உடை அணிந்து வந்து மெட் காலா நிகழ்ச்சியில் அசத்தினார்.

மேலும், பல வித்தியாசமான உடைகள் மற்றும் மேக்கப்களுடன் நடிகைகள், பாடகிகள், மாடல் அழகிகள் இந்த ஆண்டு மெட்காலா ஃபேஷன் திருவிழாவை வேறு லெவல் எனர்ஜியுடன் கொண்டாடினர்.

ல, தளபதியுடன் நடிக்கணும் – இது சூப்பர் குளோப் அழகியின் ஆசை!

You'r reading ஃபேஷன் விரும்பிகளுக்கான ஃபுல் மீல்ஸாக களைகட்டிய மெட்காலா 2019! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சபாநாயகர் நோட்டீசுக்கு விளக்கம் கொடுக்கணுமா? - கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுக்கு வந்த சந்தேகம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்