என்ஜிகே உடன் போட்டிப் போடுமா எனை நோக்கி பாயும் தோட்டா?

No clash between NGK and ENPT release

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவான எனை நோக்கி பாயும் தோட்டா படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த வாரம் மே 17ம் தேதி மிஸ்டர் லோக்கல், மான்ஸ்டர், நட்புனா என்னானு தெரியுமா? ஆகிய மூன்று படங்கள் மட்டுமே வெளியாகின்றன.

இதனால், இந்த வார ரேஸில் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் போட்டியிட வாய்ப்பில்லை. அடுத்த வாரம் என்ன என்ன படங்கள் வெளியாகின்றன என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

அதற்கு அடுத்த வாரம் மே 31ம் தேதி செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படம் வெளியாகிறது.

என்ஜிகே படத்தின் டீஸர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி மாஸ் காட்டி வரும் நிலையில், என்ஜிகே படத்துடன் எந்த படமும் மோதுவதாக தெரியவில்லை.

மேலும், அண்ணன் இயக்கத்தில் வெளியாகும் என்ஜிகே படத்துடன் தம்பி தனுஷ் போட்டியிட விரும்பமாட்டார். இதனால், அடுத்த மாதமாவது எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

59 தொகுதிகளில் 6-வது கட்ட வாக்குப்பதிவு- பாஜகவுக்கு சோதனை தான்!

You'r reading என்ஜிகே உடன் போட்டிப் போடுமா எனை நோக்கி பாயும் தோட்டா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விடாது கருப்பு போல தமிழகத்தை காவு வாங்கும் வேதாந்தா...; ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மீண்டும் வெடிக்கும் போராட்டம்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்