அடல்ட் காமெடி படத்துக்கு இப்படியொரு ஆபாச டைட்டிலா?

Another Adult Comedy movie will ready to release in Tamil Film Industry

டெம்பிள் மங்கிஸ் யூடியூப் பிரபலம் விஜய் வரதராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடல்ட் காமெடி பேய் படத்திற்கு ‘பல்லு படாம பாத்துக்க’ என்ற ஆபாச டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கெளதம் கார்த்தி நடிப்பில் இருட்டு அறையில் முரட்டு குத்து எனும் அடல்ட் காமெடி பேய் படம் ரிலீசாகி வெற்றியும் பெற்றது. அந்த படத்தின் டைட்டில் மற்றும் ஆபாசமான டீஸர் மற்றும் டிரெய்லர்களுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதுபோல தற்போது மீண்டும் ஒரு அடல்ட் காமெடி படம் உருவாகி வருகிறது. அந்த படத்திற்கு ‘பல்லு படாம பாத்துக்க’ எனும் ஆபாசமான இரட்டை அர்த்தம் கொண்ட டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பரிதாபங்கள், பிளாக்‌ஷிப், புட்சட்னி என யூடியூப் சேனல்களில் இருந்து வெள்ளித்திரைக்கு பல பிரபலங்கள் நடிகர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் டெம்பிள் மங்கிஸ் பிரபலம் விஜய் வரதராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படம் தான் இந்த பல்லு படாம பாத்துக்க.

இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளனர். இந்த படமும் அடல்ட் காமெடி பேய் படமாகவே உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பல காட்சிகளுக்கு சென்சார் போர்ட் கட் கொடுத்து ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You'r reading அடல்ட் காமெடி படத்துக்கு இப்படியொரு ஆபாச டைட்டிலா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 3வது திருமணத்துக்கு ரெடியான அவெஞ்சர்ஸ் பட நாயகி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்