ஆடையே போடாமல் ஆதாம் ஏவாளாக மாறிய ஜெயம்ரவி காஜல் அகர்வால்!

Jayam Ravi - Kajal Agarwal in Adam and Eve avatar

ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் 7வது லுக் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி படத்தின் 7வது லுக் இன்று வெளியானது. இதுவரை வெளியான ஆறு லுக்கிலும் நாயகன் ஜெயம் ரவி மட்டுமே காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், 7வது லுக்கில் நாயகி காஜல் அகர்வாலும் இடம்பிடித்துள்ளார்.

மேலும், ஆதாம் – ஏவாள் லுக்கில் உள்ள இந்த 7வது லுக் போஸ்டரை நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

9 கெட்டப்புகளில் ஜெயம் ரவி இந்த படத்தில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு காலக் கட்டத்தில் படத்தின் போஸ்டர்கள் ரிலீசாகி வருவதால், டைம் மெஷின் கான்செப்ட் திரைப்படமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இன்னும் 2 போஸ்டர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் வெளியாகும் என்றும், விரைவில் படம் ரிலீசாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

You'r reading ஆடையே போடாமல் ஆதாம் ஏவாளாக மாறிய ஜெயம்ரவி காஜல் அகர்வால்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொலைகாரன் படத்தின் ’கொல்லாதே கொல்லாதே’ பாடல் ரிலீஸ்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்