சீனாவில் 2.0 எப்போ ரிலீஸ் தெரியுமா?

2.0 gets release date in China

கடந்த ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 ஹாலிவுட் தரத்தில் கிராபிக்ஸ் மற்றும் 3டி தொழில்நுட்பம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், படம் சுமார் 600 கோடி வசூலை உலகளவில் ஈட்டியது.

இந்நிலையில், சீன மொழியில் டப் செய்யப்பட்டு 2.0 வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சீன மொழியில் 2.0 ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 12ம் தேதி சீனாவில் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் 2.0 ரிலீசாகிறது.
இந்த படம் சீனாவில் நல்ல வரவேற்பை பெற்றால், ஆயிரம் கோடி வசூலை ஈட்டிய முதல் தமிழ் படம் என்ற சாதனையையும் ஷங்கரின் 2.0 திரைப்படம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் தமிழ் மொழியை விட இந்தியில் தான் அதிக வசூலை ஈட்டியது. 

You'r reading சீனாவில் 2.0 எப்போ ரிலீஸ் தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இனி ஹோம்லி இல்லை; கவர்ச்சி பக்கம் ரூட்டை மாற்றும் ராஷி கண்ணா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்