காலையிலேயே இந்தியளவில் டிரெண்டான வானில் இருள் ஹேஷ்டேக்

Nerkonda Paarvai VaanilIrul Song Released and Trending in Twitter

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானில் இருள்’ பாடல் தற்போது ரிலீசாகியுள்ளது.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் மெய்மறக்கச் செய்யும் அற்புதமான மெலோடி பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலில், பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள், மற்றும் பெண்கள் சந்திக்கும் வலிகளை யுவன் ஷங்கர் ராஜா சரியாக கையாண்டுள்ளார்.

இந்த பாடல், இன்று காலை 7.45 மணிக்கு ரிலீசான சற்று நேரத்திலேயே, இதற்கென காத்திருந்த அஜித் ரசிகர்கள், இந்தியளவில் இந்த பாடலின் ஹேஷ்டேகான ‘வானில் இருள்’ ஹேஷ்டேகை டிரெண்டாக்கியுள்ளனர்.

விஜய் படத்தின் பிகில் குறித்த அப்டேட்ஸ்கள் வந்த போது, அஜித் – விஜய் ரசிகர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது போல, இன்றும், ட்விட்டரில் இரு பிரிவினருக்கும் இடையே சமூக வலைதளங்களில் சண்டை ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரஜினி படத்தின் இயக்குநருக்கு தமிழிசை எச்சரிக்கை..! விளம்பரத்துக்காக பேசக்கூடாது என சாடல்..!

You'r reading காலையிலேயே இந்தியளவில் டிரெண்டான வானில் இருள் ஹேஷ்டேக் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சமூக வலைதளங்களில் அவதூறாக வீடியோ - போலீஸ் கமிஷனரிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்