சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ட்ரீட்!

NVP Second single release on August 28th

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான மைலாஞ்சி பாடல் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயனின் முதல் படமான மெரினா படத்தை இயக்கிய பாண்டியராஜ், கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளையை இயக்கி வருகிறார்.

விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நம்ம வீட்டு பிள்ளையின் முதல் சிங்கிளான எங்கள் அண்ணன் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இரண்டாவது பாடல் நாளை மறுநாள் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் பவர்ஃபுல் ரோலில் நடிக்கிறார். நாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார்.

இமான் இசையில் உருவாகியுள்ள மைலாஞ்சி எனும் ரொமாண்டிக் பாடல் சிவகார்த்திகேயன் ஹிட் லிஸ்டில் இன்னொரு மைல் கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ட்ரீட்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் 30-ந் தேதி வரை நீட்டிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்