ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

GVprakash new movie first look releases tomorrow

சதீஷ் செல்வகுமார் இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். அந்த படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் நடித்துள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மாமன் மச்சான் உறவை இந்த அளவிற்கு யாராலும் படத்தில் காட்ட முடியாது என படத்தை அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷின் அடுத்தடுத்த படங்களான ஐங்கரன், அடங்காதே, 100%காதல், ஜெயில் போன்றவை ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் தனது அடுத்த படத்தின் விவரங்கள் பற்றி டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த ஜி.வி.பிரகாஷ், அதில் தெரிவித்ததாவது; தனது அடுத்த படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்க ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் டில்லி பாபு தயாரிப்பதாகவும், அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மாடல் அழகியான திவ்யபாரதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

You'r reading ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புகழேந்தி வீடியோ விவகாரம்.. விசாரித்த பின்பு நடவடிக்கை : டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்