100% காதல் டிரைலர் ரிலீஸ்!

100 percent kadhal trailer release

ஜி.வி. பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள 100% காதல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

சந்திரமெளலி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், ஷாலினி பாண்டே, நாசர், தம்பி ராமைய்யா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள 100% காதல் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

அர்ஜுன் ரெட்டி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஷாலினி பாண்டேவுக்கு கிடைத்த தமிழ் படம் 100% காதல் திரைப்படம். ஆனால், படத்தின் மேக்கிங்கில் ஏற்பட்ட குளறுபடிகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது, பட்டி டிக்கரிங் பார்த்து படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு ஆயத்தமாகி உள்ளது.

நாகசைத்தன்யா, தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 100% லவ் படத்தின் ரீமேக் தான் இந்த படம். தற்போது வெளியாகியுள்ள டிரைலரை பார்த்தால், தெலுங்கு வெர்ஷனை ஃபிரேம் பை ஃபிரேம் எடுத்துள்ளது போலவே தெரிகிறது. ஆனால், படம் எந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கும் என்பது ரிலீசுக்கு பிறகே தெரிய வரும்.

You'r reading 100% காதல் டிரைலர் ரிலீஸ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு.. அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு, கண்டனம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்