காப்பான் தெலுங்கு வெர்ஷன் பந்தோபஸ்த் டிரைலர் கட்ஸ் நல்லா இருக்கே!

Bandobasth Trailer gets massive response

சூர்யாவின் காப்பான் படம் தெலுங்கில் பந்தோபஸ்த் என்ற பெயரில் வரும் செப்டம்பர் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. பந்தோபஸ்த் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, மோகன் லால், சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படம் வரும் செப்டம்பர் 20ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகின்றது.

தெலுங்கில் இந்த படத்திற்கு பந்தோபஸ்த் என பெயர் வைத்துள்ளனர். பிரதமராக மோகன் லால் நடித்துள்ளதால், அவருக்கு காப்பானாக இருக்கும் சூர்யா, நாட்டிற்காக என்ன செய்கிறார் என்பதே திரைக்கதையாக இருக்கும் என்பது டிரைலர் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

சூர்யாவின் 22வது ஆண்டு சினிமா வாழ்க்கையை சிறப்பிக்கும் வகையில் அவசர அவசரமாக தமிழ் டிரைலர் வெளியிட்டு, அனைத்து சூர்யா ரசிகர்களின் வெறுப்பு மற்றும் கோபத்தை படக்குழு சம்பாதித்தது.

இந்நிலையில், தற்போது தெலுங்கில் வெளியாகியுள்ள பந்தோபஸ்த் டிரைலர் மிரட்டுகிறது. நிறைய ஆக்‌ஷன் காட்சிகளை கொண்டு ஒரு மாஸ் டிரைலர் கட் செய்துள்ளனர்.

இந்த டிரைலரை பார்த்த சூர்யா ரசிகர்கள் மீண்டும் புத்துணர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இதே டிரைலரை தமிழ் மொழியில் விடுமாறு கோரிக்கையும் வைத்துள்ளனர்.

You'r reading காப்பான் தெலுங்கு வெர்ஷன் பந்தோபஸ்த் டிரைலர் கட்ஸ் நல்லா இருக்கே! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிகில் இசைவெளியீட்டு விழாவில் புதிய சிக்கல் ரசிகர்கள் ஏமாற்றம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்