ஹியூமன் கம்ப்யூட்டர் சகுந்தலா தேவி ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

Shakuntala Devi Human Computer First Look Released

வித்யா பாலன் நடிப்பில் உருவாகவுள்ள சகுந்தலா தேவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

வெயிட்டிங், லண்டன் பாரீஸ் நியூயார்க், எக்ஸ்: பாஸ்ட் இஸ் பிரசண்ட் படங்களை இயக்கிய பாலிவுட் இயக்குநர் அனு மேனன் இயக்கத்தில் வித்யா பாலன் நடிப்பில் உருவாகி வரும் படம் சகுந்தலா தேவி.

மனித கம்ப்யூட்டர் என்ற பட்டப்பெயரை வாங்கிய பெண் கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் பாலிவுட்டின் முன்னணி நாயகி, பயோபிக் படங்களுக்கு என்றே அச்சடித்து செய்த வித்யா பாலன் நடிக்கிறார்.

அண்மையில் வித்யாபாலன் நடிப்பில் வெளியான மிஷன் மங்கள் திரைப்படம் 250 கோடி வசூலை தாண்டி பாக்ஸ் ஆபிஸ் வெற்றியடைந்துள்ளது.

இந்நிலையில், தற்போது, சகுந்தலா தேவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டிவிட்டர் உள்ளிட்ட தனது சமூக வலைதள பக்கங்களில் வித்யா பாலன் வெளியிட்டுள்ளார்.

மூன்றாம் இடத்தில் கால்குலேட்டர், இரண்டாம் இடத்தில் கம்ப்யூட்டரை வைத்து, முதலிடத்தில் சகுந்தலா தேவியை நிற்க வைத்திருப்பது போன்ற சித்தரிப்பில் ஃபர்ஸ்ட் லுக் கதையின் கருவையும், மனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவியின் புகழையும் உணரும்படி அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

You'r reading ஹியூமன் கம்ப்யூட்டர் சகுந்தலா தேவி ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்டீவ் ஸ்மித் உலக சாதனை படைத்தும் டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்